ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 பேர் கைது....*
ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 பேர் கைது....*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 பேர் கைது.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தொழிற்சங்ககள் சார்பில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஇன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் மம்சாபுரம் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியலில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கன்டண கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மரியலில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.