மன்னர் வெங்கலராஜனின் 501- வது ஜெயந்திவிழா

கன்னியாகுமரி;

Update: 2025-08-20 03:22 GMT
கன்னியாகுமரி,  தென்தாமரைகுளம் அருகே உள்ள கோயில்விளை வெங்கல ராஜன்கோட்டை ரோட்டில் மன்னர் வெங்கலராஜனின் 501- வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி  காலையில் புஷ்பாஞ்சலி மற்றும் இனிப்பு வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வெங்கல ராஜன் அறக்கட்டளை  தலைவர் கவிஞர்  நீலம் மதுமயன் , உறுப்பினர் தாமரை பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்தாமரை குளம் பேரூராட்சி உறுப்பினர் பாய் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார், கீழமணக்குடி திருச்சிலுவை ஆலய அருள் தந்தை வினோ, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கோம்பவிளை ஊர் தலைவர் பெரியமுத்து நாகமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பச்சைமால், செல்வின் பாபு, குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News