அரியலூரில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம் அனுசரிப்பு.

அரியலூரில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2024-12-24 12:41 GMT
அரியலூர் டிச.24- அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 51 -ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான எஸ் எஸ் சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வெகணேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News