காயல்பட்டினத்தில் ரூ.5.10 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள்
காயல்பட்டினத்தில் ரூ.5.10 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்;
காயல்பட்டினம் நகராட்சியில் ரூ.5.10 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு படுகை கட்டுமானப் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி, காயல்பட்டினம் நகராட்சி பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சி மூலதன மானிய நிதி மற்றும் இயக்குதல் பராமரிப்பு நிதியின் கீழ் ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு படுகை கட்டுமானப் பணிகளை கருணாநிதி எம்பி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து காயல்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.