காட்டுபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூபாய் 520 பறிமுதல்.
காட்டுபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூபாய் 520 பறிமுதல்.
காட்டுபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூபாய் 520 பறிமுதல். கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காட்டுபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் காட்டுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, தென்னிலையில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பாளையம் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரூர் மாவட்டம்,புகலூர் தாலுகா, தெற்கு தென்னிலை, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் வயது 27, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தர்ம கோடாங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 520 ஐ யும் பறிமுதல் செய்தனர். மேலும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த தென்னிலை காவல்துறையினர், பிறகு அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.