கள்ளழகர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 55 லட்சம்.

மதுரை அருகே அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது;

Update: 2025-05-31 02:41 GMT
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயிலில் உள்ள உண்டியல்கள் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கோவில் உண்டியல்கள் நேற்று (மே.30) திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணும் பணி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உண்டியலில் காணிக்கையாக 55 லட்சத்து 40 ஆயிரத்து 624 ரொக்கமும், தங்கம் 19 கிராமும், வெள்ளி 340 கிராமும் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உண்டியல் திறப்பின் போது கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், கூடலழகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் பிரதீபா, ஆய்வாளர் சாவித்திரி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News