தேனி அருகே ரூ 5,50,000 மோசடி மூன்று பேர் மீது வழக்கு பதிவு
வழக்குப்பதிவு;
தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது உறவினர் விஷாலுக்கு வந்த மர்ம அழைப்பில் குறைந்த தொகையில் தங்க நாணயங்கள் தருவதாக கூறியதை தொடர்ந்து இருவரும் பணத்துடன் கர்நாடக மாநிலத்திற்கு பிப்.5 அன்று சென்றுள்ளனர். அங்கே மர்ம நபர்கள் சிலர் இவர்களிடம் இருந்த 5,50,000 பறித்துக் கொண்டு ஏமாற்றினர். இது குறித்த புகாரில் ஆண்டவர், சிவா, சிவனேசன் ஆகியோர் மீது நேற்று (மார்.18) போலீசார் வழக்கு பதிவு.