கரூர் மாவட்டத்தில் 57.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 57.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் 57.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்திருந்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் குளித்தலையில் 2.60 மில்லி மீட்டரும் மாவட்டத்தில் அதிகபட்சமாக தோகை மலையில் 46.80 மில்லி மீட்டரும் பஞ்சபட்டியில் மூன்று மில்லி மீட்டரும் கடவரில் 5 மில்லி மீட்டர் என மொத்தம் 57.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 4.78 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.