சர்வதேச சிலம்பப் போட்டியில் தேனி மாணவர்கள் 6 பேருக்கு தங்கப்பதக்கம் பெற்றனர்
கோவாவில் நடந்த சர்வதேச ஒற்றை கம்பு சிலம்பம் போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 6 மாணவர்கள் தங்கம், 2 மாணவர்கள் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்
சர்வதேச சிலம்பப் போட்டியில் தேனி மாணவர்கள் 6 பேருக்கு தங்கப்பதக்கம் பெற்றனர் கோவாவில் நடந்த சர்வதேச ஒற்றை கம்பு சிலம்பம் போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 6 மாணவர்கள் தங்கம், 2 மாணவர்கள் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர். நேஷனல் பூத் ஸ்போர்ட்ஸ் அண்ட் எஜு கேசன் ஃபெடரேஷன் சார்பில் கோவாவில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி ஆகஸ்ட் 24 ,25, 26 தேதிகளில் நடந்தது . தேனி மாவட்ட அமைச்சூர் அசோசியேசன் கீழ் இயங்கும் ஏவிஎம், சிலம்பம் கூடத்தில் பயின்ற மாணவர்கள் 8 பேர் போட்டியில் பங்கேற்றனர். அமைச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர் துரைமுருகன் கூறியதாவது, கோவாவில் நடந்த சர்வதேச போட்டியில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து மலேசியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1400 பே,ர் ஒற்றை கம்பு ,இரட்டைக் கம்பு, சுருள்வால், குத்து வரிசை, மான் கொம்பு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர் .ஏவிஎம் சிலம்பம் கூடத்தில் பயின்ற 14 வயதுக்கு உட்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யாழ் மொழி, வைஷ்ணவி கிருஷ்ணா, சசிதரன், சிவசுப்பிரமணி, முத்துக்கனி, சம்யுக்தா , ஆகிய ஆறு மாணவர்கள் தங்கப்பதக்கம், நிதிஷ்குமார் ,தருண் கார்த்திக் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். கன்னியப்ப பிள்ளை பட்டியில் உள்ள அமைச்சூர் கிக் பாக்சிங் பயிற்சி மையத்தில் நடந்த பாராட்டு விழாவில் செயலாளர் துரைமுருகன் பயிற்சியாளர்கள் ஆனந்த் வேல்முருகன் ,ஜெயவேல், வர்த்தக பிரமுகர் திருமுருகன், போடி ஆர் எம் டி சி கிளை மேலாளர் பாண்டியராஜன் உள்பட பலர் வாழ்த்தினர்.