உடுமலையில் விபத்தில் துண்டான கை 6 மணி நேரத்தில் இணைப்பு

மருத்துவர்கள் சாதனை

Update: 2024-12-28 07:35 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிராமத்தில் சில தினங்களுக்கு முன் விபத்து ஒன்றில் 19 வயது வாலிபர் இடது கை உண்டானது.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் துண்டான கையுடன் மோகன் ஆர்த்தோ மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் வந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த தலைமை மருத்துவர் எம் எஸ் மோகன்ராஜ் உடனடியாக அவசர பிரிவில் அனுமதித்தார் பின்னர் தலைமை மருத்துவர் மோகன்ராஜ் தலைமையிலான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் கௌஷிக் குமார் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் நர்மதா ,சுரேஷ் ஆகிய குழுவினர் விபத்தில் கையை இழந்த வாலிபருக்கு திவிர சிகிச்சை மேற்கொண்டனர் முதலில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வாயிலாக முதல் கட்ட வலி நிவாரணம் அளிக்கப்பட்டது பின்னர் பாதிக்கப்பட்ட கையினை சுத்தம் செய்து டிரெஸ்ஸிங் போடப்பட்டது. கதிரியக்க மற்றும் ஸ்கேன் துறை மருத்துவர் விஜய் ஆனந்த் அறிவுரைப்படி இரு பகுதிகளிலும் ரத்த நாளங்கள் சம்பந்தமான தகவல்கள் பெறப்பட்டன .பின்னர் துண்டிக்கப்பட்ட கை குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கப்பட்டது முதல் உதவிக்கு பின் ரத்த வங்கிக்கு ரத்த தேவைகள் பற்றி தகவல் கொடுக்கப்பட்டது அறுவை சிகிச்சை அரங்கமும் தயார் நிலையில் இருந்த நிலையில் மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சையை துவங்கினர். துண்டான கையை மணிக்கட்டு பகுதியில் சரி செய்தல் முழங்கைக்கு மேல் பகுதி எலும்பினை சீரமைத்தல் போன்ற பணியை தனித்தனியே மேற்கொண்டனர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குழு கையினை திரும்ப பொருத்தும் ரீபிளான்டேசன் பணிக்காக தயார் செய்த பின் எலும்பு இணைப்பிற்கு ரத்த நாளங்கள் சரி செய்யும் பணி நடைபெற்றது பின்னர் ஆறு மணி நேரம் நடைபெற்ற சவாலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்து சாதனை படைத்த மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் வாலிபர் தற்பொழுது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார் . இது குறித்து தலைமை மருத்துவர் மோகன்ராஜ் கூறும் பொழுது.. விபத்து ஏற்பட்ட உடனே உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த காரணத்தால் தேவையான மருத்துவர்கள் உதவியுடன் 6 மணி நேரம் போராடி உண்டான கை சவாலான அறுவை சிகிச்சை மூலம் தற்பொழுது இணைக்கப்பட்டுள்ளது சென்னை பெங்களூர் கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இவ்வாறான சவாலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் உடுமலையில் இந்த சிகிச்சை தற்பொழுது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவர் தெரிவித்தார்

Similar News