சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 6 பேர் மீது வழக்கு

பாப்பிரெட்டிபட்டி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த ஆறு பேர் பொம்மிடி காவலர்கள் வழக்கு பதிவு

Update: 2025-01-08 05:57 GMT
தர்மபுரி மாவட்டம், திப்பிரெட்டிஅள்ளியை சேர்ந்த 17வயது சிறுமிக்கும், நத்த மேடு பகுதியை சேர்ந்த மாதப்பன் மகன் பித்தன் என்பவருக்கும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இது குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி, 1098க்கு தர்மபுரிக்கு புகார் வந்தது. அதன்பேரில், சைல்ட் ஹெல்ப்லைனை சேர்ந்த ஜோதி மற்றும் ஊர் நல அலுவலர் நிர்மலா ஆகிய இருவரும் சேர்ந்து, அக்டோபர் 30ம் தேதி இது குறித்து சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமி அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து கொண்டு இருக்கும் போது, திருமணம் நடந்தது தெரிந்தது. மேலும் கணவருடன் சிறுமி வாழ்ந்து வந்துள்ளார். இதனால் சிறுமி 3மாதம் கர்ப்பிணியாக இருந்து, தானாகவே கரு கலைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு, தொப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இது குறித்து சைல்டு ஹெல்ப் லைன் மூலம், பொம்மிடி காவல்நிலையத்தில் கடந்த நேற்று புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சிறுமியின் தாய், தந்தை மற்றும் ரித்திகா என்பவர், சிறுமியின் கணவரான பித்தன், அவரது தந்தை மாதப்பன், மாமியார் வேடியம்மாள் உள்ளிட்ட பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

Similar News