காங்கேயம் அருகே ஆடுகளை  நாய்கள் கடித்து பலி - 6 மணி நேரமாக சாலை மறியல் - பரபரப்பு 

காங்கேயம் அருகே ஆடுகளை  நாய்கள் கடித்து பலி - மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து 6 மணி நேரமாக சாலை மறியல் - பரபரப்பு ;

Update: 2025-02-13 15:20 GMT
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட பகுதி மற்றும் காங்கேயம் பகுதி என இரண்டு இடங்களில் நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலியானதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கடந்த 6 மணிநேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  காங்கேயம் சிவன்மலை கோவில்பாளையத்தில் மணியார் செல்வராஜ் என்பவரின் தோட்டத்தில் நேற்று  3 வெள்ளாடுகளை   நாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள் இறந்து விட்டது.1 படுகாயம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்காததை  குறித்து விவசாயி வேதனையில் இருந்தனர். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை இராமலிங்கபுரத்தில் விவசாயி நல்லசிவம் ஆடுகளை நாய் கடித்தது. இதில் 30 ஆடுகளில் 20 ஆடுகள் பலியானது 10 ஆடுகள்  படுகாயம் அடைந்தது. இதை தொடர்ந்து. இராமலிங்கபுரம் பேருந்து நிலையத்தில் சென்னிமலை - காங்கேயம் சாலையில்  விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதில் இரண்டு மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என கூறி காங்கேயம் அடுத்துள்ள திட்டுபாறை பாரவலசு பகுதியில் ஈரோடு பழனி பிரதான சாலையில் இறந்த ஆடுகளின் சடலத்துடன் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் 6 மணி நேரமாக சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். தைப்பூச தேர் திருவிழாவானது சென்னிமலை மற்றும் சிவன்மலை பகுதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் வேளையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இழப்பீடு குறித்து அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News