வடமதுரையில் ஆடு திருட்டு, கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது

வடமதுரையில் ஆடு திருட்டு, கஞ்சா கடத்திய 6 வாலிபர்கள் கைது, 1.200 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள் பறிமுதல்;

Update: 2025-06-01 18:41 GMT
திண்டுக்கல் வடமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக ஆடுகள் திருடு போனது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் வடமதுரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இது குறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சண்முகம், சரவணபிரபு, குருபிரசாத், ரஞ்சித்குமார், சபரிகார்த்திக், ஸ்ரீகாந்த் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் ஆடு திருடியதும், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்ததை தொடர்ந்து வடமதுரை போலீசார் அவர்களிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News