வேப்பனப்பள்ளிஅருகே சண்டை சேவல் சூதாட்டம் ஆடிய 6 பேர் கைது.

வேப்பனப்பள்ளிஅருகே சண்டை சேவல் சூதாட்டம் ஆடிய 6 பேர் கைது.;

Update: 2025-07-30 03:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள கே.என்.போடூர் வனப்பகுதியில் சண்டை சேவல்களை வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து போலீசார் அந்த கிராமத்தில் பசவேஸ்வரர் கோவில் அருகே சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த கிரிபாபு, அரவிந்த், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடராமன், பசவராஜ், குமார் ஆகியோர் என தெரியவந்தது. இதை அடுத்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மற்றும் 17 டூவீலர்கள் சண்டை சேவல்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News