தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கிய 6 பேர் கைது.
தேன்கனிக்கோட்டை அருகே விவசாயியை தாக்கிய 6 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பிக்கனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (34) விவசாயி. இதே பகுதியை சேர்ந்தவர் கரியப்பா (65) இவர்கள் உறவினர்கள் இந்த நிலையில் இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த 26-ஆம் தேதி அன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் லோகேசை, கரியப்பா தரப்பினர் அடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து லோகேஷ் அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் கரியப்பா (65) மாரப்பா (50) சிக்கண்ணா (45) ஷோபா (40) சீதா (45) ராஜம்மா (55) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.