கோவை சாலைப் பகுதியில் 6 அடி சாரைப் பாம்பு – அதிர்ச்சி வீடியோ
வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி சாரைப் பாம்பு .;
கோவை தடாகம் சாலையிலுள்ள சக்தி முருகன் நகரில் சுமார் 6 அடி நீளமான சாரைப் பாம்பு குடியிருப்பு பகுதியில் நுழைய முயன்றது. வீட்டிற்குள் செல்ல முற்பட்ட பாம்பை கண்ட பெண் அச்சமடைந்து விரட்ட முயன்ற காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. பாம்பு பின்னர் சாலையில் அலைந்தபோதும், சிலர் அதை அடிக்க முயன்றனர். இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குழந்தைகளை வெளியில் தனியாக விளையாட விடக்கூடாது என்றும், இரவு நேரங்களில் பகுதி மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் குடியிருப்போர் கேட்டுக்கொண்டுள்ளனர்.