கடலூர்: இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கடலூர் மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.;
கடலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 30) உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு வெளியானது. அதில் திட்டக்குடி நகராட்சி அலுவலக வளாகம், பண்ருட்டி நகராட்சி பழைய கடலூர் சாலை ராஜாத்தி மகால், வானமாதேவி கிராம ஊராட்சி அலுவலக கட்டிடம், கீழ்அனுவம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புதுக்கூரைப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, பரமேஸ்வரநல்லூர் அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது