டிசம்பர் 6ஆம் தேதி முதல் திருச்செங்கோடு நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி தூய்மை பணியாளர்கள் நலவாரிய சங்க தலைவர் ஆறுச்சாமி பேட்டி

டிசம்பர் ஆறாம் தேதி முதல் திருச்செங்கோடு நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுப் பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு பின்நலவாரிய தலைவர் ஆறுச்சாமி பேட்டி;

Update: 2025-11-24 12:13 GMT
வரும் டிசம்பர் ஆறாம் தேதியில் இருந்து திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்குகாலைச் சிற்றுண்டி வழங்கப்படும்.தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பேட்டி திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் ஆக்கும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுப்பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்கலந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பேத்தி அளித்தார் திருச்செங்கோடு நெசவாளர் காலனி முனியப்ப சாமி விருந்து மஹாலில் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் ஆக்கும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுப்பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்குதமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் தி திப்பம்பட்டி ஆறு சாமி தலைமை வகித்தார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,தாட்கோ உதவி மேலாளர் மாறன்ஆன்ட்டி கரெப்க்ஷன் அண்ட் விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் சாம் பிரகாஷ், நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவிற்கு தலைமை வகித்து பேசிய வாரிய தலைவர் ஆறுச்சாமி பேசும்போது மற்ற நல வாரியங்களுக்கு இருப்பது போல் அல்லாமல் அதிகப்படியான நிதியை தமிழக முதல்வர் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரியத்திற்கு வழங்கியிருக்கிறார் அந்தத் தொகை முழுமையாக தூய்மை பணியாளர்களுக்கான நலத்திற்கு மட்டுமே செலவு செய்யப்படும் நலவாரியத்தில் உறுப்பினராகி தற்போது வரை பணியில் இருப்பதற்கான சான்று வழங்கினால் வீடுகள் கட்டித் தர 12 லட்சம் ரூபாய் வரை நிதி வழங்கப்பட்டு வருகிறது இதனை தூய்மை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தூய்மை பணி வேலையல்ல சேவை என தமிழக முதல்வர் நம்மை பாராட்டி இருக்கிறார் இந்த தலைமுறையோடு இந்தப் பணியை நாம் விட்டு விட வேண்டும் நமது அடுத்த தலைமுறை படித்து பட்டம் பெற்று உயர்ந்த நிலைக்கு வந்து சிறப்பான பதவிகளை வகிக்க வேண்டும் நான் படித்ததினால் தான் என்று அனைவருடனும் சமமாக அமர்ந்திருக்கிறேன் இந்த வாய்ப்பை நமது அடுத்த தலைமுறை  பெற வேண்டும் என கூறினார்.தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேசினார் தொடர்ந்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் வழங்கினார்கள்அனைத்து தூய்மை பணியாளர்களுடனும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் உணவருந்தி மகிழ்ந்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் ஆறுசாமி கூறியதாவது தூய்மை பணியாளர்களுக்கு என அதிகப்படியான நிதி ஒதுக்கி அதில் 40 கோடி ரூபாய் வரை கையிருப்பு உள்ள நிலையில் அதனை தூய்மை பணியாளர் நலத்திற்குதவிர வேறு எந்த பணிக்கும் பயன்படுத்தக் கூடாது எனதமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் நமக்காகஇறப்பு நிதி கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கியதோடு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசும் முதல்வர் ஸ்டாலினும் நிறைவேற்றி தந்துள்ளனர் அதனை சரியாகப் பயன்படுத்தி பலன்களை அடைய நல வாரியத்தில் தூய்மை பணியாளர்கள் குறிப்பாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உறுப்பினராக வேண்டும் இந்த நலவாரியத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும்.தமிழ்நாடு அரசின் திட்டங்களை தூய்மை பணியாளர்களுக்கு எடுத்து கூறி அவர்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்டம் முழுக்க சுற்று பயணம்மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம் தற்போது நகரங்கள் வாரியாக சுற்றுப் பயணமும் மேற்கொண்டு வருகிறோம்.நகரப் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் வேண்டுகோள் வைத்தால் தமிழக முதல்வரிடம் பேசி மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினார் நிகழ்ச்சியின் முடிவில் வாரியத்தின் துணைத் தலைவர் கனிமொழி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Similar News