மணப்பாறை அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு. தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
மணப்பாறை அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு. தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.;
மணப்பாறை அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு. தீயணைப்பு துறையினர் பிடித்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தவிட்டுப்பட்டி பெரியார் நகரில் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இன்று அவரது வீட்டின் தண்ணீர் தொட்டி அருகே பெரிய பாம்பு ஒன்று செல்வதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாம்பை பாம்பு பிடிக்கும் கருவி மூலம் லாவகமாக பிடித்து குழாயில் போட்டு எடுத்து சென்று பொய்கைமலை வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.