ஆரணியில் 6 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல். 3 பேர் கைது.

ஆரணி, ஆக.25 ஆரணி நகரப்பகுதியில் போலீசார் ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும்ஆட்டோஆகியவற்றை டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்.ஐ சுந்தரேசன் மற்றும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-08-25 14:59 GMT
ஆரணி நகரப்பகுதியில் போலீசார் ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி க்கு ஆரணி பகுதியில் குட்கா பொருட்கள் கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் தனிப்படை அமைத்து குட்கா பொருட்களை கடத்தல் கும்பலை பிடிக்குமாறு உத்தரவிட்டார். இதன் பெயரில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, எஸ்.ஐ சுந்தரேசன், தனிப்பிரிவு போலீசார் ஜோதி, க்ரைம் போலீஸார் அருணகிரி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆரணி நகரப் பகுதியைச் சேர்ந்த மலையம்பட்டு சாலையில் சந்தேகத்தின் பேரில் சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 12 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனால் ஆட்டோவை ஆரணி நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் ஆரணி சைதாப்பேட்டையைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் நடராஜ்(51) என்பவர் கடத்தி வந்தது தெரியவந்தது. இவர் ஆரணி சைதாப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் தொடர்ந்து விசாரணை செய்ததில் மேற்கண்ட நடராஜ் என்ற நபருக்கு மாதாராம் மகன் தேவாரம்(26) என்பவர் சப்ளை செய்து வருவதாக தெரியவந்தது. மேற்படி தேவாரத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்காராம் என்பவர் பெங்களூர் கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து போதைப்பொருட்களை காரில் கடத்தி வந்து கொடுத்தவர் என்று தெரியவந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை பக்காராம் என்பவர் பெங்களூரில் இருந்து போதைப்பொருட்களை ஆரணிக்கு எடுத்து வந்து தேவாராம் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது தேவாரத்துடன் பரத் என்பவர் இருந்துள்ளார். இதனால் நடராஜ், தேவாரம், பரத் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தலைச் சேர்ந்த பக்காராம் என்பவர் தலைமறைவாகி உள்ளார். மேலும் 6 லட்சம் மதிப்புள்ள 165 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Similar News