பசுபதிபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது ரூபாய் 3850 பறிமுதல்.

பசுபதிபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது ரூபாய் 3850 பறிமுதல்.;

Update: 2025-04-21 12:29 GMT
பசுபதிபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது ரூபாய் 3850 பறிமுதல். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 20-ஆம் தேதி இரவு 7:20- மணி அளவில், தெற்கு தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள பாப்பாத்தி என்பவரது வீட்டில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த காமராஜ், அருணாச்சல் நகரை சேர்ந்த வடிவேல், தெற்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார், சாமிநாதன், நடுத்தெருவை சேர்ந்த அமீர்கான், அருணாச்சலம் நகரை சேர்ந்த கனகராஜ் உள்ளிட்ட 6- பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 3,850-யும் பறிமுதல் செய்தனர். 6- பேர் மீதும் வழக்கு பதிவு செய்து,பிறகு அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News