பட்டாசு ஆலையில் வெடி விபத்து 6 தொழிலாளர்கள் பலியானதில் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆலை உரிமையாளர் உட்பட மூவர் சிறையில் அடைப்பு.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து 6 தொழிலாளர்கள் பலியானதில் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆலை உரிமையாளர் உட்பட மூவர் சிறையில் அடைப்பு.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 6 தொழிலாளர்கள் பலியானதில் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆலை உரிமையாளர் உட்பட மூவர் சிறையில் அடைப்பு. விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஆலையின் உரிமையாளர் பாலாஜி (லைசன்ஸ்தாரர்) மற்றும் தற்போது ஆலையை வாங்கிய சசிபாலன்,தேவி, போர்மேன்கள் கணேசன்,பிரகாஷ்,பாண்டியராஜன்,சூப்பர்வைசர் சதீஷ்குமார் ஆகிய 7 பேர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், போர்மேன் கணேசன் மற்றும் சூப்பர்வைசர் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் வச்சக் காரப்பட்டி காவல் துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். இந்நிலையில் ஆலை உரிமையாளர் சசிபாலனை இன்று அதிகாலை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் இவர்கள் மூவரும் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்ற வருகிறது.