தென்காசியில் மகளிா் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ. 60.57 கோடி கடனுதவி
மகளிா் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ. 60.57 கோடி கடனுதவி;
தென்காசி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.60.57 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் சென்னை கலைவாணா் அரங்கத்திலிருந்து மகளிா் திட்டத்தின் மூலம் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவைத் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், ராணி ஸ்ரீகுமாா் எம்பி., எம்எல்ஏக்கள் எஸ். பழனிநாடாா், சதன்திருமலைக்குமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மைக்கேல்அந்தோணி பொ்ணான்டோ(பொ), மாவட்ட முன்னோடிகள் வங்கி மேலாளா் கணேசன் கலந்து கொண்டனா்.