திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்ற 61வயது பெண் மீது நகர பேருந்து மோதல் முன்பக்க சக்கரத்தில் சிக்கியதில் பெண்ணின் இரு கால்களும் சேதம்

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்ற 61வயது பெண் மீது நகர பேருந்து மோதல் முன்பக்க சக்கரத்தில் சிக்கியதில் பெண்ணின் இரு கால்களும் நசுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி சம்பவம் குறித்து நகர போலீசார் விசாரனை;

Update: 2025-11-23 10:51 GMT
திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மனைவி மணிமேகலை 61 என்பவர் புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் கைப் பையுடன் சாலையை கடக்க முயன்ற போது நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்ற TN30N1333 என்ற எண் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த1C நகர பேருந்து மணிமேகலை மீது மோதியது இதில் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி மணிமேகலையின் இரண்டு கால்களும் நசுங்கியது உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ளதனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News