வளத்தியில் 62 மி.மீ. மழைப் பொழிவு

62 மி.மீ. மழைப் பொழிவு;

Update: 2024-12-29 15:50 GMT
விழுப்புரம் மாவட்டம், வளத்தியில் 62 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் கேரளக் கடலோரப் பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது.இது கிழக்கு திசை காற்றை தமிழக நிலப்பரப்பு வழியாக ஈா்க்கும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இதன் காரணமாக விழுப்புரம் நகரிலும், செஞ்சி மற்றும் வளத்தி, அவலூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலையில் மழை பெய்தது. அதன் பின்னா் மழை இல்லையென்றாலும் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இந்த நிலையில், சனிக்கிழமை காலை விழுப்புரம் நகரில் புதிய, பழைய பேருந்து நிலையப் பகுதிகள், திருச்சி, சென்னை நெடுஞ்சாலைகள், செஞ்சி, திருக்கோவிலூா் சாலைகள், கிழக்கு புதுச்சேரி சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்): வளத்தி-62 மி.மீ., அவலூா்பேட்டை-50, வல்லம்-14.40, மணம்பூண்டி-7, அனந்தபுரம்-6.20, செஞ்சி, அரசூா் தலா-5, திருவெண்ணெய்நல்லூா்-2.50, செம்மேடு-2.20, விழுப்புரம் -1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Similar News