பேக்கரியை உடைத்து ரூ.62 ஆயிரம் பணம் கொள்ளை
வடமதுரை அருகே பேக்கரியை உடைத்து ரூ.62 ஆயிரம் பணம், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் கொள்ளை;
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் பணம், கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்றது. கடந்த வாரம் அய்யலூர் பகுதியில் 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் நடைபெற்றது. இதனால் வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அச்சத்துடன் உள்ளனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.