திருப்பத்தூர் அருகே 65 ஆயிரம் மதிப்பிலான 15 பாக்ஸ் வெளி மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் 4 இருசக்கர வாகனம் ஒரு கார் பறிமுதல்!. மத்திய நுண்ணறிவு போலீசார் நடவடிக்கை!.

திருப்பத்தூர் அருகே 65 ஆயிரம் மதிப்பிலான 15 பாக்ஸ் வெளி மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் 4 இருசக்கர வாகனம் ஒரு கார் பறிமுதல்!. மத்திய நுண்ணறிவு போலீசார் நடவடிக்கை!.;

Update: 2025-01-08 11:52 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 65 ஆயிரம் மதிப்பிலான 15 பாக்ஸ் வெளி மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் 4 இருசக்கர வாகனம் ஒரு கார் பறிமுதல்!. மத்திய நுண்ணறிவு போலீசார் நடவடிக்கை!. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிகே. ஆசிரமம் பகுதியில் ஒரு வீட்டில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் கடத்தியும் அதனை பதுக்கி விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டபோது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் 15 பாக்ஸ் அளவிலான மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் வருவதை கண்ட மது பாக்கெட்டுகள் கடத்திய நபர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அங்கே விட்டு தப்பி சென்றனர். அதன் காரணமாக கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 பாக்ஸில் 180Ml கொண்ட 720 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருப்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் காரணமாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? எந்த பகுதியை சார்ந்தவர்கள்? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மது பாக்கெட்டுகளின் மதிப்பு மட்டும் சுமார் 65 ஆயிரம் இருக்கும் எனவும் போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

Similar News