மயிலாடுதுறை அருகே பாரசலூர் கிராமத்தில் 7 கோயில்களில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பாரசலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், வரசக்தி விநாயகர், என ஏழு கோயில்களின் கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடைபெற்றது
மயிலாடுதுறை அருகே பரசலூரில் பத்மநாப விநாயகர், சந்தனகாளியம்மன், பிடாரி அம்மன், மன்மதனேஸ்வரர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஏழு கோயில்களில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு யாக சாலைகள் அமைத்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 17ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகாபூர்ணஹதி செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வளம் வந்து முதலில் பத்மநாப விநாயகர், பிடாரி அம்மன் ஆகிய கோயில்களில் உள்ள கும்ப கலசத்தில் புனித நீர் உற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற. அதனைத் தொடர்ந்து வரசக்தி விநாயகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், ஆஞ்சநேயர், மன்மதனேஸ்வரர், சந்தனகாளியம்மன், ஆகிய ஆலயங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்