காங்கேயத்தில் 7 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட முகமுடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரல்
காங்கேயம் பாரதியார் நகர் மற்றும் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் அமாவாசை அதிகாலை நேரத்தை பயன்படுத்தி 7 வீடுகளில் பூட்டை உடைத்து பணம் பல லட்சம் மற்றும் நகை சுமார் 30 பவுன் கொள்ளை நடைபெற்றது.அந்த கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது
காங்கேயம் தாராபுரம் சாலையில் பாரதியார் நகரில் வசித்துவருபவர் கண்ணன் (54) வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு,பட்டுப்புடவை போன்றவற்றை கொள்ளை போனது . இதே போல் திவ்யா (36) சக்திநகரில் ரூ.1லட்சம் மற்றும் 1 பவுன் நகை , மேலும் இவரின் வீட்டின் அருகே உள்ள பிரபாவதி என்பவரது வீட்டில் 7 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. மேலும் சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற நிலையில் இரவே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இரண்டு காவலர்கள் நேரில் வரவே கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கொண்டு கடப்பாரையை காவலர்களை நோக்கி வீசி தப்பியோடியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 3க்கும் மேற்பட்ட பேக்குகளை சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மறைத்து வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த வேளையில் டிஐஜி சரவணா சுந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தனிப்படை அமைத்து தீவிரமாக கொள்ளையர்களை தேடி வரும் வேளையில் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின்றது. மேலும் முகமூடி கொள்ளையர்கள் கையில் ஆயுதங்களுடன் சர்வசாதாரணமாக உலவருவது பொது மக்களிடையே ஒரு வகை அச்சத்தை ஏற்படுத்துகின்றது. காங்கேயம் காவல்துறையினர் இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்கவேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.