திமிரி பள்ளியில் 7-ம் ஆண்டு தொடக்க விழா
பள்ளியில் 7-ம் ஆண்டு தொடக்க விழா!;
திமிரி- கலவை சாலையில் கீழ்பாடி கிராமத்தில் இயங்கி வரும் ஸ்ரீ ஜெயம் நாமக்கல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து, மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி செந்தில்குமார், செயலாளர் பூ.சிங்காரவேல், பள்ளியின் இயக்கு னர்கள் டி.நரேஷ்குமார், எஸ்.சுரேஷ்குமார், அ.சக்திவேல், சு.ரமேஷ், எம்.பரத் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள், மாணவ-மாணவிகள், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.