பீரோவில் வைத்திருந்த திருமணத்திற்கு வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருட்டு
பீரோவில் வைத்திருந்த திருமணத்திற்கு வைத்திருந்த 7 பவுன் நகை, பணம் திருட்டு;
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் மோகன்(65) மளிகை கடை வைத்துயள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி(60) இரண்டு பேரும் தனது மகனின் சிகிச்சைகாக கடந்த 5ஆம் தேதிஅன்று கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்தனர். அபபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் மகள் திருமணத்திற்கு வைத்திருந்த ரூ.5.60 லட்சம் மதிப்புள்ள, 7 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 5.50 லட்சம் பணம் உள்ளிட்டவைகளை திருட்டபட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டிலிருந்த, சிசிடிவி கேமராவில் பதிவனதை தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்து. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.