சாலை மறியல் செய்தமைக்காக 7 பேர் மீது வழக்குப்பதிவு
குமாரபாளையத்தில் சாலை மறியல் செய்தமைக்காக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
குமாரபாளையம் அப்பராயர் சத்திரத்திற்க்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருவதால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், குடியிருப்புகளை அகற்ற வந்தனர். இதில் உடன்பாடு இல்லாததால், காவிரி பழைய பாலம் நுழைவுப்பகுதியில் எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல், போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் செய்ததாக அப்பகுதியை சேர்ந்த தங்கவேல், 35, உள்பட 7 பேர் மீது குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்