வாகன சோதனையில்  7 மூட்டை கணேஷ் புகையிலை மற்றும் 1 மூட்டை கூலிப் புகையிலை மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து நடவடிக்கை*

காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில்  7 மூட்டை கணேஷ் புகையிலை மற்றும் 1 மூட்டை கூலிப் புகையிலை மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து நடவடிக்கை*;

Update: 2024-12-20 03:39 GMT
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் புகையிலை பொருட்கள் மற்றும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து காரியாபட்டி வழியாக பரமக்குடிக்கு சொகுசு காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூடை மூடையாக கொண்டு செல்வதாக தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலபெருங்கரை பகுதியைச் சேர்ந்த பில்லத்தி குரு (33) என்பவர் இனோவா சொகுசு காரில் மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 7 மூட்டை கணேஷ் புகையிலை மற்றும் 1 மூட்டை கூலிப் புகையிலை மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி மதிவாணன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பில்லத்திகுருவை காரியாபட்டி போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News