குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஞானம் (35). இவரது அக்கா அமுதா ராணி தக்கலை அருகே உள்ள வெள்ளி கோட்டில் வசித்து வருகிறார். அக்கா வீட்டிற்கு சுனில் ஞானம் வரும்போது அதே பகுதியை சேர்ந்த சுஜின் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுஜின் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதிக வட்டி தருவதாக கூறி சுனில் ஞானமும் ரூ. 23 லட்சம் பணம் கொடுத்தார். ஆரம்பத்தில் மாதந்தோறும் சுஜின் வட்டி பணம் கொடுத்ததாக தெரிகிறது. பின்னால் சுஜினால் வட்டி பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் சுனில்ஞானம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணமும் கிடைக்கவில்லை. இதையடுத்து சுனில் ஞானம் தக்கலை போலீசில் புகார் செய்தார். சுஜினை போலீசார் நேற்று (5-ம் தேதி) பிடித்து விசாரணை நடத்தினர். அவரை போலீசார் பிடித்து சென்றதை அறிந்ததும் மேலும் கடன் கொடுத்த பலர் தக்கலை போலீஸிடம் தங்களிடம் பணத்தை வாங்கி விட்டு தராமல் ஏமாற்றியதாக கூறினார்கள். இதை கேட்ட போலீசார் பணம் கொடுத்ததற்கான ஆதாரத்துடன் புகார் அளிக்குமாறு கூறினர். தொடர்ந்து 13 பேர் தனித்தனியாக சுஜின் மீது புகார் அளித்தனர். இந்த வகையில் 70 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து செய்து அவரை கைது செய்து, பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.