தமிழ்நாடு நியாய விலைக் கடை ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*

தமிழ்நாடு நியாய விலைக் கடை ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*;

Update: 2025-08-02 12:21 GMT
விருதுநகரில் தமிழ்நாடு நியாய விலைக் கடை ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் - 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு நியாய விலைக் கடை ஊழியர் சங்கம் சார்பாக கிளை செயலாளர் பொன்ராஜ், மாநில குழு உறுப்பினர் ரமேஷ், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சங்கரி, தலைமையில், பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக்க வேண்டும், 3% அகவைப்படி,பி. ஓ .எஸ் . சார் வரை மேம்படுத்த வேண்டும்.விரல் ரேகை பதிவை 40% ஆக்குதல், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, எடையாளர் நியமனம், கருணை ஓய்வூதியம் உயர்த்திவழங்கி அனைத்து பண்டகசாலை ஊழியர்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்திட வேண்டும், ஊழியர்களுக்கு காப்பீட்டுத் தொகையை பத்து லட்சமாக உயர்த்த வேண்டும், பொருள்களை பாக்கெட் முறையில் வழங்கிட வேண்டும், ரேசன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் நேரடியாக விநியோகம் செய்திட வேண்டும், மாத ஊதிய ரூபாய் 26,000 குறைந்தபட்சம் ஓய்வுதியம் 9000 மற்றும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் , உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விருது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நியாய விலைக் கடை ஊழியர்கள் சங்கம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முடிக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News