கதிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: 700 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய டாக்டர் பழனி. பெரியசாமி !

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2025-07-27 08:46 GMT
கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் மூன்று ஆண்டுகள் பயின்ற 700 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் லீ ராயல் மற்றும் PGP கல்விக்குழும தலைவரும் தொழில் முன்னோடியுமான டாக்டர் பழனி. பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தன் உரையில், கல்வி என்பது வெறும் பட்டம் மட்டுமல்ல, வாழ்க்கையின் புதிய அத்தியாயம் என்றும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கனவு, உழைப்பு ஆகியவை வெற்றிக்கான மையக் குணங்கள் என்றும் வலியுறுத்தினார். கல்வி சமூக வளர்ச்சிக்கும் முக்கியம் என கூறிய அவர், பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களின் பங்களிப்பையும் மாணவர்கள் மறக்கக்கூடாது என்றும் நினைவுபடுத்தினார். விழாவில் கதிர் கல்வி குழும தலைவர் E.S. கதிர், செயலர் லாவண்யா, துணைத் தலைவர் K.S. மிதிலேஷ், இணைச் செயலர் C.M. விது பிரதிக்ஷா மற்றும் கல்லூரி முதல்வர் R. கற்பகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News