சூலூர்: சாதி, மத பேதமின்றி 71 ஆண்டுகள் தொடரும் பஜனை விழா !

71 ஆண்டுகளாக கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள இருகூர் கிராமத்தில் சாதி, மத பேதமின்றி மார்கழி மாத திருவீதி பஜனை விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

Update: 2025-01-18 06:36 GMT
71 ஆண்டுகளாக கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள இருகூர் கிராமத்தில் சாதி, மத பேதமின்றி மார்கழி மாத திருவீதி பஜனை விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நான்கு வயது குழந்தைகள் முதல் 90 வயது முதியவர்கள் வரை அனைவரும் இணைந்து திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் கந்தர் அனுபூதி பாடல்களைப் பாடி, சூடித் தந்த சுடர் கொடியாம் ஆண்டாள் மற்றும் முருகப்பெருமான் படங்களை ஏந்தி ஊர்வலமாகச் செல்கின்றனர்.இந்த ஆண்டு விழாவில் இரண்டாம் குரு மகா சன்னிதானம் பஞ்சலிங்க சுவாமிகள் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தார். இவ்விழா பழமை வாய்ந்த திருமால் கோயில், சிவன் கோயில் மற்றும் அங்காளம்மன் கோயில் வழியாகச் சென்று, சுமார் 10 கோவில்களில் நடைபெறுகிறது. இந்த பஜனை விழாவைப் பற்றி பேசிய அப்பகுதி மக்கள், 70 ஆண்டுகளாக இடைவிடாமல் நடைபெறும் இந்த விழா, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஒன்றிணைத்து சகோதரத்துவத்தை வளர்க்கிறது. அடுத்த தலைமுறைக்கு சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதில் இந்த விழா பெரும் பங்கு வகிக்கிறது என தெரிவித்தனர்.

Similar News