அழகாபுரத்தில் தமிழ்நாடு முதலலைச்சர் ஸ்டாலின் 72 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்,

ஆண்டிமடம் அருகே அழகாபுரத்தில் தமிழ்நாடு முதலலைச்சர் ஸ்டாலின் 72 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-29 19:09 GMT
அரியலூர், மார்ச்.30- தமிழ்நாடு முதலலைச்சர் ஸ்டாலின் 72 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், அழகாபுரத்தில்,ஒன்றிய அவைத்தலைவர் இராமதாஸ் வரவேற்புரையில், ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன் தலைமையில்,ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் திருச்சி எழில்மாறன் செல்வேந்திரன் ,மாவட்டசெயலாளரும், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் ,தலைமை கழக இளம் பேச்சாளர் தினகரன் ஆகியோர் சிறப்புரையாற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.நிகழ்ச்சியில் கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், சட்டமன்ற தொகுதி மேலிட மேற்பார்வையாளர் கலா சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட,ஒன்றிய,கிளை நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர். கலந்துகொண்டனர்.

Similar News