கரூரில் இணைய வழி குற்றங்கள் மூலம் மீட்கப்பட்ட ரூ.73- லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கரூரில் இணைய வழி குற்றங்கள் மூலம் மீட்கப்பட்ட ரூ.73- லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-09-03 07:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் இணைய வழி குற்றங்கள் மூலம் மீட்கப்பட்ட ரூ.73- லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கரூர் மாவட்ட பொதுமக்களிடமிருந்து கடந்த ஆறு மாதங்களில் இணையவழி குற்றங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட ரூபாய் 73 லட்சம் மற்றும் களவு போன மற்றும் தொலைந்து போன அலைபேசிகள் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களை விசாரணை செய்து மீட்கப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 208 கைபேசிகள், கரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையால் மீட்கப்பட்டு, இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சைபர் கிரைம் காவல்துறை ஏடிஎஸ்பி பிரபாகரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சுதர்சன், லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமூக வலைத்தளம் மூலம் பணத்தைப் பறிகொடுத்த, கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மற்றும் தொலைந்து போன செல்போன் உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீட்கப்பட்ட பணத்திற்கான காசோலையை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதேபோல் தொலைந்து போன செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தார். மீட்கப்பட்ட ரூபாய் சுமார் ஒரு கோடியே 23 லட்சம் பணம் மற்றும் அலைபேசிகளை பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள், மாவட்ட காவல் துறைக்கும், மீட்டுக்கு கொடுத்த சைபர் க்ரைம் காவல்துறையினருக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர். அதேபோல, இந்த செயலில் கடந்த ஆறு மாத காலமாக தீவிரமாக ஈடுபட்டு பணம் மட்டும் செல்போன்களை மீட்டு கொடுத்த காவல்துறை அதிகாரிகளையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News