கோபியில்நகை வாங்குவது போல் நடித்து கடையில் திருட்டு பெண் மீது போலீசில் புகார்

கோபியில்நகை வாங்குவது போல் நடித்து கடையில் திருட்டு பெண் மீது போலீசில் புகார்

Update: 2024-09-21 06:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபியில்நகை வாங்குவது போல் நடித்து கடையில் திருட்டு பெண் மீது போலீசில் புகார் கோபி கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர் வந்தார். பின்னர் அவர் தங்க மோதிரங்கள் வாங்க வேண்டும் என அங்கு பணியில் இருந்த ஊழியர் நிஷா என்பவரிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் தங்க மோதிரங்களை காண்பித்துள்ளார். ஆனால் அவை பிடிக்கவில்லை என கூறி அந்த பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின்னர் அங்கிருந்த நகைகளை ஊழியர் சரிபார்த்த போது 3 கிராம் எடையுள்ள 2 தங்க மோதிரங்கள் திருட்டு போனது தெரியவந்தது. நகை வாங்குவது போல் நடித்து பெண் தங்க மோதிரங்களை திருடி சென்றது தெரியவந்தது. - இது குறித்து நிஷா கோபி போலீசில் புகார் செய்தார். அதன் - பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News