பாண்டிச் சரக்கு 73 லிட்டர் பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டத்திள்கு காரைக்கால் பகுதியிலிருந்து கடத்திவரப்படும் கள்ளச்சாராய பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது வாடிக்கை. இதுகுறித்து ரகசிய தகவலின் பேரில் சீர்காழி போலீசார் நடவடிக்கை;
. மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சீரகாழி காவல் ஆய்வாளர் புயல்பாலச்சந்திரன், சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ஜெயா மற்றும் காவல் போலீசார் திருமுல்லைவாசல், அம்பேத்கர் தெரு, கொல்லை குப்பைமேடு அருகில் மதுவிற்பனை செய்துவந்த ராஜ்குமார் (24), என்பரை கைது செய்து மேற்படி நபர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 73 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்தனர் கள்ளச்சாராய விற்பனை செய்தவழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில்அடைக்கப்படடார். . ராஜ்குமாருடன் மது விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள வழக்கின் மற்ற நபர்களை சீர்காழி காவல்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை சட்ட விரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 738 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 769 நபர்கள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து சுமார் 5792 லிட்டர் மதுபான வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கின் நபர்கள் மது விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் இதுவரை தொடர்ந்து சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 05 நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் அலுவலம் தகவல் தெரிவித்துள்ளது.