நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் டாக்டர் கே.பி.ராமலிங்கம் பங்கேற்பு..

நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் டாக்டர் கே.பி.ராமலிங்கம் பங்கேற்பு..

Update: 2024-09-22 13:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் நாடு முழுவதும் அரசின் திட்டப்பணிகள் தேக்கம் அடையாமல் மக்களிடம் உரிய நேரத்தில் சென்று சேரும்! -பாஜக மாநில துணைத்தலைவரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் கே.பி. இராமலிங்கம் பேச்சு நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாவட்ட மருத்துவ அணி பிரிவு சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான Dr. K.P. இராமலிங்கம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய K.P. இராமலிங்கம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில் பல கட்டங்களாக சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறுவதால் தேர்தலுக்கு முன்பும் பின்பும் மக்கள் மற்றும் அரசாங்க வளர்ச்சி பணிகள் தேக்கமடைகின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மூன்று, நான்கு தேர்தல்கள் வரை ஒரே தேர்தலாக நடந்தது. அதற்கு பின்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு ஆட்சி கலைப்புகள் நடைபெற்ற காரணத்தால்தான் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து ஒரே தேர்தலாக நடத்த முடியுமா என்றும் ஆராயப்படுகிறது. அதுவும் சாத்தியமானால் நல்லது.ஜனநாயக ரீதியாக மக்களை சந்திக்க தயங்குகின்றவர்கள்தான் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். மக்கள் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பவர்கள் இதனை ஆதரிப்பார்கள். மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை, மக்கள் மீதி இருக்கின்ற நம்பிக்கையின் காரணமாகவே கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகள் சுயநலத்தை பார்க்காமல், குறைகளை நிவர்த்தி செய்யும் கருத்துக்களை கூறி ஒரே நாடு ஒரே தேர்தல் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் நாடு தேர்தலுக்கு என்று அதிக அளவிலான அதாவது 20% நிதியை செலவிட நிலையை வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்ற கட்சிகள்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை எதிர்க்கும். பல்வேறு கட்சிகளை இணைத்து கூட்டணியாக ஆட்சி செய்பவர்கள் இதனை வரவேற்பார்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தனித்தனி நிலை எடுக்கும் கட்சிகள் இதனை எதிர்ப்பார்கள். காங்கிரஸ் இந்த சட்டத்தை எதிர்ப்பது அவர்கள் தலையில் அவர்களே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் ஆகும்.ஒரே தேர்தல் ஒரே நாடு என்ற நிலை 2047-இல் உலகத்திற்கு வழிகாட்டக் கூடிய பாரத தேசம் வலிமையான ஆட்சியோடு வழிநடத்தப்படுவதற்கு அடித்தளத்தை அமைக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கப்படக்கூடிய ஒன்றாகும். சிக்கல்களை களைந்து சீராக ஒரே தேர்தல் நடத்துவது பாஜக முன்னெடுக்கும். சிறப்பு அந்தஸ்தை நீக்கி, காஷ்மீர் மாநிலத்தை மற்ற மாநிலங்களைப் போல், ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தி,தேசத்தில் பங்கு பெற வைக்கிற ஒரு மாநிலமாக காஷ்மீர் மாநிலத்தை உருவாக்கியது பாஜக ஆட்சிதான். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் லட்சியத்தில் வெற்றி பெறுவதுதான் பாஜகவின் நோக்கமாகும். ஏற்கனவே குலைந்து போய் உள்ள தேர்தல் முறையை சீர்படுத்தும் வலிமை பாஜகவிடம் மட்டுமே உள்ளது. இந்த நோக்கத்தோடு ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை செயல்படுத்துவோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி ராமலிங்கம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மறைமுகமாக ஈடுபட்டுள்ளாரா என அரசு காவல்துறை மூலம் விசாரிக்க வேண்டும். தவறு செய்தவர்களை கைது செய்யது வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். உண்மையான குற்றவாளிகளை தப்ப விட மாட்டேன் என முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். செல்வப் பெருந்தகை மீது குற்றம் நிரூபணம் ஆனால் என்றால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய பொறுப்பை முதலமைச்சர் இருக்க வேண்டுமே தவிர கொலையாளிக்கு துணை போகக்கூடாது. பாஜக அதிமுக கூட்டணியால் அதிமுக பாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் வேண்டுமென்றால் திமுக, அதிமுக கூட்டணி அமைக்கட்டும். ஓநாய் ஆடு திமுக அதிமுக ஒப்பிட்டு பேசினர். இனியும் திமுக ஆட்சி வர வேண்டாம் என திமுக கூட்டணியில் உள்ளவர்களே நினைக்கின்றனர். கம்யூனிஸ்ட் முழு மனதோடு திமுகவை ஆதரிக்கவில்லை. அப்படி ஆதரித்தால் கம்யூனிஸ்ட் கொள்கையை விட்டு விலகியது என்றுதான் அர்த்தம். மக்கள் பணி செய்வதற்காக அல்ல பதவி, அதிகாரத்தை பெறுவதற்காகவே திமுக, அதன் கூட்டணி கட்சிகள் கூட்டணி அமைக்கிறது. தமிழகத்தில், பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. யாரையும் வற்புறுத்தி நாங்கள் கட்சியில் சேர்க்கவில்லை. முழு மனதோடு கட்சி சேர்பவர்களை பாஜக என்றும் அரவணைத்து வரவேற்கிறது என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாஜக மாநில மருத்துவ பிரிவு செயலாளர் Dr.S.T. ஷியாம்சுந்தர் தலைமையில் மருத்துவர்கள் சிவக்குமார், மோனிஷா, ஹரி பிரசாத், ஜீவிதன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்து தக்க ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், முழங்கால் மூட்டு மற்றும் இடுப்பு வலி, நுரையீரல், இருதயம், கண் பரிசோதனை இலவசமாக பரிசோதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. தேவையானவர்களுக்கு X-Ray, ECG, Blood Sugar பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Similar News