சிதம்பரம் மான்ய நடுநிலை பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவள விழா
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்;

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வெண்மணி கிராமத்தில் உள்ள சிதம்பரம் மான்ய நடுநிலை பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, ரூ.75 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். அருகில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் .ம.பிரபாகரன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் பலர் உள்ளனர்.