திருப்பத்தூர் அருகே 75 வயது மூதாட்டியிடம் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்
திருப்பத்தூர் அருகே 75 வயது மூதாட்டியிடம் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 75 வயது மூதாட்டியிடம் 4 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி அடுத்த லக்கி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி நாகராணி (75). இவர் மாதந்தோறும் வாங்கும் ஓய்வூதிய பணத்திற்கான ஆவணங்களை புதுப்பிக்க திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் மூதாட்டி நாகராணி மனு எழுத தன்னுடைய சுருக்கு பையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து எண்ணி இருக்கிறார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து அவர் ஓ ஏ பி பணம் குறித்த ஆவணம் புதுப்பிக்க வேண்டுமா என்று கூறியுள்ளான் அப்போது மூதாட்டி ஆமாம் என்றும் சிலா நாட்களுக்கு முன்பு நான் கீழே விழுந்து எக்ஸ்ரே எடுக்கணும் என்று மூதாட்டி கூறியுள்ளார் அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மர்ம நபர், வா நான் உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறியுள்ளான் அதை நம்பிய மூதாட்டி மர்ம நபரை நம்பி அவருடன் ஆட்டோவில் சென்றுள்ளனர் அருகாமையில் இருந்த ஒரு தனியார் எக்ஸ்ரே லேபுக்கு சென்று எக்ஸ்ரே எடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் மூதாட்டியின் கை பையில் இருந்த 4 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் செல் போன் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் என மொத்தத்தையும் திருடி சென்றுள்ளார். என்ன செய்வது என்று அறியாத மூதாட்டி அங்கும் இங்கும் அலைந்து பின்பு நகர காவல் நிலையத்திற்கு வந்து சம்பவம் குறித்து புகார் தெரிவித்ததை தொடர்ந்து நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக இருக்கும் மூதாட்டியை குறிவைத்து மனசாட்சியே இல்லாமல் அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பட்டப் பகலில் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.