விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி கிராமத்தில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி கிராமத்தில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-01-26 11:17 GMT
------- விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஓ.கோவில்பட்டி கிராமத்தில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2024 முதல் 31.12.2024 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சியில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில்; ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம். மேலும், ஒரு கிராமத்தினுடைய உண்மையான வளர்ச்சி என்பது அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை கல்வி கற்று, நல்ல வேலை வாய்ப்பை பெறும் பொழுது, அந்த குடும்பம், கிராமம் வளர்ச்சி அடையும். எனவே, அனைவருக்கும் கல்வி என்பது மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நல்ல கல்வியாளராக உருவாக்க வேண்டும். கல்வி மற்றும் அதற்கு இணையாக சுகாதாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். கல்வி, சுகாதாரம் இரண்டும் இருந்தால் நமது குடும்ப வளர்ச்சியும், சமுதாய வளர்ச்சியும் மேன்மையடையும் என தெரிவித்தார். இக்கிராமசபை கூட்டத்தில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு தொடர்பாகவும், தொழுநோய் விழிப்புணர்வு தொடர்பாகவும் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் மருத்துவத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

Similar News