டி.மாவிடந்தல் கிராமத்தில் ரூ.7.62 லட்சம் மதிப்பில் புதிய மின் மாற்றி அமைப்பு

கோட்ட பொறியாளர் பங்கேற்பு

Update: 2024-09-05 10:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே உள்ள டி.மாவிடந்தல் ஊராட்சியில் உள்ள 6 வார்டுகளில் 1200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேற்கு பள்ளிவாசல் தெரு, புது தெரு, பெரிய தெரு மற்றும் இப்பகுதி விவசாய நிலங்களுக்கு 100 கே.வி.ஏ., மின் திறன்கொண்ட மின் மாற்றியின் மூலம் மின் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், இங்கு சீரான மின் விநியோகம் இல்லாமல், குறைந்த மின்னழுத்தமாக இருந்து வந்ததால், இப்பகுதிக்கென தனியாக புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில், சீரான மின்சாரம் வழங்கிடும் வகையில், டி.மாவிடந்தல் புது தெரு பகுதியில், மின் வாரிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்து 180 மதிப்பில், புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மின்மாற்றி இயக்க விழா நிகழ்ச்சியானது டி.மாவிடந்தல் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு, கோ.பூவனூர் துணை மின் நிலைய உதவி கோட்டப் பொறியாளர் பாரதி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் கதீஜா பீ, ஊராட்சி துணைத் தலைவர் காத்தூன் பீ, கிராம முக்கிய பிரமுகர் குடுஜான், மங்கலம்பேட்டை உதவி மின் பொறியாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விருத்தாசலம் மின் செயற் பொறியாளர் சுகன்யா கலந்து கொண்டு புதிய மின் மாற்றியை இயக்கி வைத்தார். இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மின் வாரிய சிறப்பு நிலை போர்மேன் சிவக்குமார், மின் பாதை ஆய்வாளர் ஜெயக்குமார், மின் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News