இலையூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா.அதிமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
இலையூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்..;
அரியலூர், பிப்.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் பஸ் நிறுத்தத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாவட்ட மீனவர் அணி இணை செயலாளரும், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளருமான பூபதி அன்பழகன் தலைமையில் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். நிகழ்ச்சியில் தொழில் நுட்ப செயலாளர் தங்கராசு, பசுபதி, கோரியம்பட்டி கிளை செயலாளர் டி.எம்.டி.குமார், மேலவெளி கிளைச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.