அஞ்சல் துறை சார்பில் 78 வது சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி அஞ்சல் ஊழியர்கள் தேசிய கொடியை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Update: 2024-08-14 11:10 GMT
நாட்டின் 78 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை  அஞ்சல் துறை  சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 200 க்கு மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டு கையில் தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். 78 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டையும் தேச ஒற்றுமை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறன. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை தபால் துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தலைமையில் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கிய  விழிப்புணர்வு பேரணி பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், பட்டமங்கல தெரு மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அஞ்சலகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் தபால் துறையை ஊழியர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை கைகளில் ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். அப்போது பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடமும், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுனர்கள், மாணவிகள் ஆகியோர்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News