கரூர் மாவட்டத்தில் 7.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் 7.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Update: 2024-12-08 03:23 GMT
கரூர் மாவட்டத்தில் 7.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. பெஞ்சல் புயலைத் தொடர்ந்து தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் நகர்வு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வரும் 10-ம் தேதி முதல் கன மழை பெய்ய துவங்கும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்தது. ஆயினும்,நேற்று மாலை கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் திடீரென தோன்றிய கருமேகங்கள் மழையாக பெய்தது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று காலை 8 மணி நிலவரப்படி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குளித்தலையில் 4.40 மில்லி மீட்டரும், பஞ்சபட்டியில் 3.40 மில்லி மீட்டர் மழை பெய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு பெய்த மழையின் சராசரி அளவு 0.65 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News