கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம் !

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 79வது சுதந்திர தினம் முப்படை என்சிசி மாணவர்களின் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது.;

Update: 2025-08-15 07:28 GMT
கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 79வது சுதந்திர தினம் முப்படை என்சிசி மாணவர்களின் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. தலைமை விருந்தினராக பங்கேற்ற ஏவி குழும நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஏ.வி. வரதராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட கால அனுபவங்களையும், தொழில் முனைவோரின் பங்களிப்பு இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம் என வலியுறுத்தினார். செயலர் திருமதி காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் கேபிஆர் சாம்பியன்ஸ் அகாடமியை திறந்து வைத்து, மூன்று தேசிய விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார். கௌரவ விருந்தினராக பங்கேற்ற கேப்டன் கே ஃபிட்னஸ் & பயிற்சி அகாடமி உரிமையாளர் திரு. டி. கண்ணன், கல்லூரி பேருந்தை கையால் இழுத்து சாதனை நிகழ்த்தினார். மாணவர்களின் சிலம்பாட்டம், பாரம்பரிய நடனம், ட்ரோன் சாகசம் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News